Monday, February 26, 2007

ஹோமியோபதி...


நேர்காணல்:
ஸ்ரீமதி ரவிச்சந்திரன்
பாதுகாப்பானதும் சிக்கனமானதும் ஹோமியோபதியே!
ஜாய்ஸ் திலகம்
பொதுவாக முன்பெல்லாம் நம் எல்லோருக்கும் காய்ச்சல் அல்லது வேறு ஏதாவது வியாதி வந்தால் உடனே ஆங்கில (அலோபதி) மருத்துவரிடம்தான் செல்வோம். ஆனால் சமீப காலமாக பல பேர் ஹோமியோபதி மருத்துவரையும் நாடிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்குக் காரணம் பக்க விளைவுகள் ஏதுமின்றி அதேசமயம் அதிகப் பணம் செலவழிக்கும் அவசியம் இல்லாமலும் உள்ளது.

டாக்டர் திருமதி ஜாய்ஸ் திலகம் சென்னை மாநகராட்சியில் முதல் ஹோமியோபதி மருத்துவராக 1980-ம் ஆண்டு பணியில் நியமிக்கப்பட்டவர். இவரது தந்தையும், சகோதரரும் ஹோமியோபதி மருத்துவர்களே! ஹோமியோபதி மருத்துவத்தை படிக்கும்போது கல்லூரியிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார். கோவாவில் நடைபெற்ற ஹோமியோபதி விஞ்ஞான கருத்தரங்கில் பங்கு பெற்று தேசிய அளவில் இரண்டாவது பரிசைப் பெற்றுள்ளார். இதழ்கள், வானொலி முதலானவற்றில் ஹோமியோபதி மருத்துவம் பற்றி பல கட்டுரைகளையும் வழங்கியிருக்கிறார். சென்ற ஆண்டு இவர் எழுதிய 'பணி சார்ந்த பிணிகள்' என்னும் நூல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் வெளியிடப்பட்டு எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. அவருடன் ஒரு நேர்காணல்.

அலோபதி அளவுக்கு ஹோமியோபதி அவ்வளவாக பிரபலமடையவில்லையே. காரணம் என்ன?

"மருத்துவ முறைகளிலேயே ஹோமியோபதி மருத்துவம்தான் தூய்மையானதும், சிக்கனமானதும் மற்றும் அஹிம்சா வழியை தழுவியதுமாகும். மறைந்த மருத்துவ மாமேதை டாக்டர் ஹானிமன் மனித உயிர்களைக் காப்பாற்ற சிறந்த வழியை வகுத்த ஒரு மருத்துவ நிபுணராவார். அவரது திறமைக்கும் ஆற்றிய அசாத்திய மருத்துவப் பணிக்கும் அவரது மனித இன நலப்பற்றுக்கும் நான் தலைவணங்குகிறேன்"-(ஒரு புத்தகத்திலிருந்து படிக்கிறார்). இந்த வரிகள் யார் சொன்னவை தெரியுமா? நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி! மேலும் ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டுபிடித்த ஹானிமன் ஆங்கில மருத்துவ எம்.டி. பட்டப்படிப்பில் ஜெர்மனியில் உள்ள எர்லேஞ்சன் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக வந்து, பின்னர் தொழில் புரிந்து கொண்டிருந்தவர். அவருக்கு 21 மொழிகள் தெரியும். அவர் ஆங்கில மருத்துவம் தெரியாததால் இந்த ஹோமியோபதி மருத்துவத்தைப் பின்பற்றவில்லை. ஆங்கில மருத்துவத்தில் சில நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பயனின்றி போகவே அல்லது பக்கவிளைவுகள் அதிகரித்து அதன் காரணமாக சில விரும்பத்தகாத முடிவுகள் ஏற்படவே ஹோமியோபதியை கண்டுபிடித்தார். எளிமையாகச் சொன்னால் தமிழில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு. அதனடிப்படையில் அமைந்ததுதான் ஹோமியோபதி. சின்கோனா மரத்து இலைகளைக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டபோது மலேரியாக் காய்ச்சல் வந்தது. பின்னர் அதே சின்கோனா மரத்து இலைகளைத் தகுந்த அளவில் சாப்பிட்டபோது மலேரியா காய்ச்சல் குணமாயிற்று. இதுதான் அவரது வாழ்வின் திருப்புமுனை. அதன்பின்னர் படிப்படியாக பல்வேறு சோதனைகள் செய்து இம் மருத்துவத்தை வளர்த்தார்.

ஆங்கில மருத்துவத்தில் நோயாளிகளை வயதின் அடிப்படையில் மட்டுமே பிரித்து அவர்களுக்கு மருந்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது என்றும் ஹோமியோபதியில் நோயாளிகளின் வயது ஒன்றாக இருந்தாலும் கூட வெவ்வேறு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன என்பதாகச் சொல்லப்படுகிறதே?

ஆமாம். இதன் காரணம் என்னவெனில் ஒரு மனிதனின் மனோநிலையைப் பொறுத்தும், உடல்ரீதியாக அவனது தாங்கும் சக்தி எவ்வளவு என்பதைப் பொறுத்துமே மருந்துகளும், அளவும் ஹோமியோபதியில் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலும் ஒரு மனிதனின் மனநிலை அவன் பார்க்கும் வேலையைப் பொறுத்தே அமைகிறது. உதாரணத்துக்கு சினிமாவில் பணிபுரிபவர்கள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வார்கள். விழித்திருப்பதற்காக காபி டீ ஆகியவற்றை அடிக்கடிக் குடிப்பார்கள். இது இவர்களுக்கு வாயு, ஏப்பம் முதலிய வாயுத் தொல்லைகளை உண்டாக்கி விடுகிறது. மேலும் தங்களுடைய மனதில் இருக்கும் உண்மை நிலையை அவ்வளவாக வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அதுவே அவர்களுக்கு இயல்பாகி விடுகிறது. நடிக நடிகையர்கள் தங்களுக்கென்று எந்தவித மகிழ்ச்சி, சோகங்கள் இருந்தாலும் அதனை மறைத்து நொடிப்பொழுதில் சிரித்து, அழுது, இப்படிப் பல்வேறு உணர்ச்சிகளைப் பொய்யாகக் காட்ட வேண்டியிருக்கிறது. இதனால் மன உளைச்சல், உடல் உளைச்சல் (Stress) அதிக அளவு இரத்தக் கொதிப்பு முதலியன உண்டாகிறது. அடிக்கடி மற்றவர் பயன்படுத்திய உடைகளை உபயோகிப்பதால் ring worm தோல் வியாதி உண்டாகிறது. கூடவே மன எரிச்சலும் உண்டாகிறது. இப்படி ஒருவர் செய்யும் பணியின் அடிப்படையில் அவரது மனோபாவமும் மாறுகிறது. அதேசமயம் ஒருவர் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகளான பேருந்து ஓட்டுனர், அலுவலகத்தில் பணிபுரியும் கணக்கர்கள், டைப்பிஸ்டுகள், டைலர்கள், தொழில் அதிபர்கள் இது போன்றவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மலச்சிக்கலிலும் பலவகைகள் உண்டு. அதேபோல அவர்கள் மலம் கழித்து விட்டு வரும்போது நாற்றமும் வெவ்வேறு வகைப்படுகின்றன. இதைப்பொறுத்தும் கூட அம்மருத்துவத்தில் வெவ்வேறு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவர்கள் அடிக்கடி காபி, டீ அருந்துவதை விடவேண்டும். காலை வேளைகளில் ஆகாரம் உண்ணாமல் இருக்கக் கூடாது. 'பைல்ஸ் எனப்படும் மூலம் தனி மூலம், பல மூலம், வெளி மூலம் என்று பல வகைகள் உள்ளன.

இதைத்தவிர முதுகெலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் வர வாய்ப்புண்டு. இவர்கள் முதுகுப்புறம் இருக்கையின் சாய்வுப் பகுதியில் இருக்குமாறு அமர வேண்டும். மலச்சிக்கலுக்கு கோக்கா, நக்ஸ்வாம், அலுமினா போன்ற மருந்துகள் இம்மருத்துவத்தில் உள்ளன. இருப்பினும் மருத்துவரை அணுகியபின் உட்கொள்வது நலம், பத்திரிகை ஆசிரியர், பத்திரிகை நிருபர், செய்தித் தொகுப்பாளர் போன்றோர் கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறப்பார்கள். இவர்களும் காலை வேளைகளில் சாப்பிடுவதே கிடையாது. தவிர வெகு நேரம் சிறுநீர் கழிக்க இயலாத சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்படும். சில நேரங்களில் ஓய்வின்றி ஒரு ஊர் விட்டு இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ஏற்படும் பலவித அசௌகரியங்கள், இவை தவிர்க்க இயலாதவை. காலை வேளைகளில் ஆகாரத்தைத் தவிர்க்கவே கூடாது. சிலநேரங்களில் உணவு சரியாகக் கிடைக்கவில்லையெனில் நல்ல நீரையாவது பருக வேண்டும். பார்ட்டிகளில் சினேகிதர்களுக்கு 'கம்பெனி' கொடுப்பதற்காக மது அருந்த ஆரம்பித்து முடிவில் அதுவே தினசரி பழக்கமாகிவிடும். இப்பழக்கம் முடிவில் ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களில் கொண்டு விட்டு விடும். சரியான இடைவெளிகளில் சாப்பிடாமல் இருந்தால் அது வயிற்றுப் புண் அதாவது அல்சரில் முடிந்து விடும். காவலர்களுக்கும் இதுபோன்ற நோய்கள் தோன்ற அதிகம் வாய்ப்புள்ளது. வாயுத் தொல்லைக்கு கார்போவெஜ், நக்ஸ்வாம், அச்போடிடா முதலிய மருந்துகளும், மலச்சிக்கலுக்கு நேட்மூர், அலுமினா, கிராபைட் முதலான மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. பேச்சாளர்கள், கோவில்களில் பணிபுரியும் மத குருமார்கள் போன்றவர்கள் அதிக நேரம் நிற்க வேண்டியிருப்பதால் கால் முட்டி இணைப்புகளில் வலியும், கால் சதைகளில் வலியும் வர வாய்ப்புள்ளது. தவிர மேடைப்பேச்சாளர்கள் டென்ஷன் என்பதைச் சந்திக்க வேண்டியிருப்பதனால் அவர்களுக்கு ரத்தக் கொதிப்பும் வருகின்றது. தமது டென்ஷனைக் குறைப்பதாக நினைத்துக் கொண்டு மது அருந்தவும் தொடங்கி விடுகின்றனர். தவிர உரத்த குரலில் பேசுவதாலும், இடைவிடாது பேசிக்கொண்டே இருப்பதனாலும் அவர்களுக்கு தொண்டைவலி வரவும், மேல் சுவாசக் குழல் வேக்காடும் வருகின்றது. இவர்கள் எந்தக் காரணங்களினால் இதுபோன்ற நோய்கள் வருகின்றன என்பதை உணர்ந்து அவற்றைத் தவிர்த்தல் நலம். ஒவ்வொரு பணி செய்யும்போதும் இதுபோன்ற ஏதாவது நோய் வருவதற்கு வாய்ப்புண்டு. அதற்காக எந்தவித வேலையும் செய்யாமலிருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். அதைவிட எந்தக் காரணங்களினால் நோய்கள் வருகின்றன என்று பார்த்து அவற்றைச் செய்யாமல் தவிர்த்தால் நலமாக வாழலாம்.

பொதுவாக ஒரு மனிதன் ஆரோக்யமாக வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நெறிமுறைகள் யாவை?

காய்ச்சி ஆறவைத்த நீரை பருகுவது நலம். காலை ஆகாரத்தை தவிர்த்து விடாதீர்கள். சீரான இடைவெளிகளில் சரியாக உணவு உண்ணுங்கள். ஒருவேளை முடியவில்லையெனில் நல்ல நீரையாவது பருகுங்கள். புகை பிடித்தலை முழுவதுமாக விட்டு விடுங்கள், மது அருந்துதல் மூளையை வேலை செய்யவிடாமல் செய்து விடும். மனைவி இருக்கும்போது வேறு உறவை நாடாதீர்கள். எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க இது ஒன்றே சிறந்த வழி. கண்களை அதிகம் உபயோகிக்க வேண்டிய வேலையிலிருப்போர் அடிக்கடி வெளியே வந்து இயற்கை வெளிச்சத்தைப் பார்ப்பது நல்லது. அதிகக் கோபம், உணர்ச்சிவசப்படுதல் இவற்றைத் தவிர்த்து, யோகா, தியானம் இவற்றைத் தினமும் செய்வது நல்லது. குளிர் சாதனப்பெட்டியில் வைத்த பொருட்களை அடிக்கடி எடுத்து சூடு செய்து உண்பது நல்லதல்ல. ஒருமுறை எடுத்தால் அதை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதையும் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக செய்வது நல்லதல்ல. உணவைப் பொறுத்தவரை தற்போது பெருகி வரும் சாலையோரக் கடைகளில் தட்டுகளை ஒரே பக்கெட்டில் நீர் வைத்து அதிலேயே கழுவுகிறார்கள். அதுபோன்ற இடங்களில் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம். இவைகள் ஹோமியோபதியில் மட்டுமல்ல. நமது முன்னோர்கள் சொல்லி வைத்த முறைகள்தாம்.

மற்ற மருத்துவமுறைகளின்றும் ஹோமியோபதி மருந்துகள் எவ்விதத்தில் வேறுபடுகின்றன?

சாதாரணக் காய்ச்சலை எடுத்துக் கொள்வோம். 104 டிகிரி காய்ச்சல் அடிக்கும்போதும் கூட அலோபதி மருந்துகளை உட்கொண்டால் உடல்நிலை சரியாகி விடும். உடல் மிகவும் அயர்ச்சியாகி சரியாவதற்கு சில வாரங்களாகும். ஆனால் குழந்தைகள் காய்ச்சலினால் அவதியுறும்போது ஹோமியோபதி மருந்து உட்கொண்டால் உடனே காய்ச்சல் இறங்காமல் படிப்படியாகத்தான் இறங்கும். ஆனால் உடல்நிலை கொஞ்சமும் சோர்வாகாது. நன்றாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதை அனுபவித்தால்தான் புரியும். மேலும் இங்கிலாந்தில் ஹோமியோபதியின் சிறப்பை நன்கு உணர்ந்து இப்படிப்பை படிக்க வேண்டுமெனில் ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. படிப்பு படித்த பின்புதான் படிக்க முடியும் என்று வைத்துள்ளார்கள். சென்ற ஆண்டு இங்கிலாந்து மகாராணி இந்தியா வந்திருந்தபோதும் கூடவே அவரது தனி ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் க்வின் என்பவர் உடன் வந்திருந்தார். வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை வரை போவதை முற்றிலும் தவிர்க்கலாம். இதனை மக்கள் முன்பை விட அதிகமாகப் புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். முற்றிலுமாக புரிந்துகொள்வதற்கு அதிக காலம் ஆகாது.

சர்க்கரை நோய் (Diabetes) பற்றிய கேள்வி-பதில்கள்

1. சர்க்கரை நோய் என்றால் என்ன?

முதலில் நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் என்ன செய்கிறது என்று பார்ப்போம். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது.

க்ளுகோஸ் எனும் சர்க்கரை தான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது.

ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால் தான் அது சர்க்கரை நோய்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம்.

2. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?

பல காரணங்களால் இது நிகழலாம்.
தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல்.
போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

3. சர்க்கரை நோய் யாருக்கு ஏற்படும்?

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும்
45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள்
எடை அதிகமாக இருப்பவர்கள்
ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

4. சர்க்கரை நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?

பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
அடிக்கடி தாகம்
அதிக பசி
மிக வேகமாக எடை குறைதல்
அதிகமாக சோர்வடைவது
கண்பார்வை மங்குதல்
வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்

5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

இரண்டாம் வகை சர்க்கரை நோயால் ஏற்படக் கூடியவை.
பார்வை இழப்பு
மாரடைப்பு
சிறுநீரகக் கோளாறு
பக்கவாதம்
கால்களை இழத்தல்
கோமா மற்றும் இறப்பு

இஞ்சியின் மகத்துவம்...

இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.

மருத்துவக் குணங்கள்: இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும்.

200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.

இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.

10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.

முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.

இஞ்சியைத் தட்டி தண்*ரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜ“ரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.

இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்

உடலிலுள்ள உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். இதனை உலகிலுள்ள மிகச்சிறந்த சுத்திகரிப்பு உபகரணம் என்று தான் சொல்ல வேண்டும்.
1- உடலின் பிற உறுப்புகள் முறையாக செயலாற்றக் கூடிய அகச்சூழலை உருவாக்குவதும்,
2- உடலின் தண்ணீர் தேவையினை ஒழுங்கு படுத்தி உடலை சமநிலையில் பராமரிப்பதும்,
3-எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பா°பர° இவற்றை சரியான அளவில் வைத்திருக்க கூடிய சக்தியான வைட்டமின் னுயை தருவதும்,
4-சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்ற தாதுப் பொருட்களின் அளவை சரிவிகிதத்தில் தருவது

என்பது உட்பட பல்வேறு பணிகளை சிறுநீரகம் சிறப்பாக செய்து வருகிறது.

சிறுநீரகத்திலுள்ள ஜெ°டா கிளாமருளர் ழுடடிஅநசரடயச என்ற முடிச்சு ரெனின் என்ற சுரப்பியைச் சுரந்து இரத்தக் குழாய்களின் அழுத்தத்தை ரெனின் ஆன்ஜியோ டென்சின் மூலம் (சுநnin - ஹபேiடி வநளேiடிn)

இரத்தக் கொதிப்பை சீர் செய்து சமநிலையில் வைக்கின்றது.

சிறுநீரகம் இரத்தக் கொதிப்பால் பாதிக்கப்படுகின்றதா? அல்லது சிறுநீரகத்தால் இரத்தக் கொதிப்பு உண்டாகிறதா?

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக இரத்தக் குழாய்களில் அடைப்பு என்பன போன்ற காரணங்களால் இரத்தக் கொதிப்பு உண்டாகிறது என்பது எவ்வளவு உண்மையோ அது போன்றே அதிக இரத்தக் கொதிப்பினால் சிறுநீரக செயலிழப்பு என்ற பாதிப்பும் உண்மையே!

பாகற்காய் (பாகல்)

தாவரவியல்ற் பெயர்;(Monordica Charantia)
பாகற்காய் ருசியில் கசக்கும் என்றாலும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.இதனை வறுக்கலாம்,அவிக்கலாம்,ஸ்ஃப் செய்யலாம்.குழம்பு,பொரியல்,செய்யலாம்.வற்றல் செய்து சேமித்து வைக்க ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

ஈரபதம்-92.4 கிராம்
புரதம்-1.6 கிராம்
கொழுப்பு -0.2 கிராம்
இழைப்பாண்டம்-0.8 கிராம்
தாதுக்கள்-0.8 கிராம்
கார்போஹைட்ரேட்கள்-4.2 கிராம்
கால்சியம்- 20 மி.கி
மக்ளீசியம்- 17 மி.கி
ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி
பாஸ்பரஸ்- 70 மி.கிஅயம்- 0.4 மி.கி
சோடியம்- 17.8 மி.கி
பொட்டாசியம்- 152 மி.கி
செம்பு- 0.18 மி.கி
சல்ஃபர்- 15 மி.கி
குளோரின்- 8 மி.கி
வைட்டமின் ஏ- 210 ஐ.யூ
தயமின்- 0.07 மி.கி
ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி
நியாஸின்- 0.5 மி.கி
வைட்டமின் சி- 88 மி.கி

100கிராமில் 5 கலோரி உள்ளது.

பாகற்காய் குளிர்ச்சியைத் தரும்.சிறந்த மலமிளிக்கி.பசியைத் தூண்டும்.பித்த உபாதைகள் நீக்கும்.
நீரழிவுக்கார்ர்களின் உணவில் பாகற்காய் அவசியம் இடம் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கும். பாகற்காய்யில் தாவர இன்சுலின(plant insulin)இருப்பதை பிரிட்டிஷ் மருத்துவ குழு ஆரிய்ச்சி செய்து தெரிவிக்கிறது.
நீரழிவு நோயாளிகள் தினம் சாப்பிட்டு வந்தால்,வைட்டமின் ஏ,பி,பி2,சி மற்றும் அயச்சத்துக்ளை அவர்கள் பெறமுடியும். தொடர்த்து பயன்படுத்திவர உயர் இரத்த அழுத்தம்,கண் உபாதைகள்,நரம்புவீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
மூன்று தேக்கரண்டி பாகல் இலைச்சாறுடன் ஒர் கிளாஸ் மோர்கலந்து பருகிட மூலம் குணமாகும்.
ஒரு கோப்பை பாகல் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் அருந்த இரத்த கோளாறுகள் நீங்கும்.
குடுத்து குடித்து ஈரலைப் பாழாக்கிக் கொண்டவர்கள் தினமும் காலையில் 30 மி.லி அளவுபாகல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நல்ல பயன் கிடைக்கும்.
ஒரு தேக்கரண்டி பாகல் வேர்களை பசைபோல் அரைத்து அத்துடன் சம அளவு தேன் அல்லது அதே அளவு துளசிச்சாறு கலந்து இரவு தோறும் அருந்த ஆஸ்துமா,மார்ச்சளி குணப்படும்.

பீட்ரூட்

இதை ஆங்கிளத்தில் (Beta Vulgaris) இதனைசீமைசர்கரை வள்ளிகிழங்கு என்று சொல்வார்கள்.மத்திய ஐரோப்பாவும்,ஐக்கிய அமெரிக்காவும் பீட்ரூட்டின் பறப்பிடம்.
தற்பேது இந்தோசீனா,பிலிப்பைன்ஸ்,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவிலும் பயிரிடப் படுகிறது.
இதில் கார்போஹைட்ரேட்கள் சர்க்கரை வடிவில் இருக்கும்.சிறிதளவு புரதமும்,கொழுப்பும் உண்டு.

ஈரபதம்-87.7 கிராம்
புரதம்-1.7 கிராம்
கொழுப்பு -0.1 கிராம்
தாதுக்கள்-0.8 கிராம்
கார்போஹைட்ரேட்கள்-8.8 கிராம்
கால்சியம்- 200 மி.கி
மக்ளீசியம்- 9 மி.கி
ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி
பாஸ்பரஸ்- 55 மி.கிஅயம்- 0.4 மி.கி
சோடியம்- 59.8 மி.கி
பொட்டாசியம்- 43 மி.கி
செம்பு- 0.20 மி.கி
சல்ஃபர்- 14 மி.கி
தயமின்- 0.04 மி.கி
ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி
நியாஸின்- 0.4 மி.கி
வைட்டமின் சி- 88 மி.கி

100கிராமில் 43. கலோரி உள்ளது.

பித்தம் காரணமாக உண்டாகும் உமட்டல், வாந்தி,வயிற்றுபோக்கு,வயிற்றுக்கடுப்பு,மஞ்சட்காமாலை ஆகியவற்றுக்கு இதன் சாறு நல்லது. பீட்ரூட் இரத்தத்தை
விருத்தி செய்யும்.இயற்கைக்குகொவ்வாத கால்சியப்படுவுகளை கரைக்கும்.
பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் பிரியும்.காலையில் உணவுக்கு முன் சாப்பிடலாம்.
சரும அழற்சி,கொப்புளங்கள்,பருக்களுக்கு பீட்ரூட் கிழங்கு,இலைகளை கொதிக்க வைத்த நீரைப் பிரயோகிக்கலாம்.
பீட்டுட் கொதித்த நீர் மூன்று பங்குடன் ஒரு பங்கு வினிகர் கலந்து ஒற்ற சரும எரிச்சல் நீங்கும்.

தீராத தலைவலியை தீர்க்கும் மாம்பழம்...

மாம்பழத்தின் பயன்கள்:மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.
தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும்.
மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜ“ரணத்தைக் கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.
மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.
கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்தினால் சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.
மாங்காயின் பயன்கள்:
இது அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும்.
மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் குறைபாடால் ஏற்படும் நோய் குணமாகும்.
காயின் தோலைச்žவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள் உறுப்புகள் பலப்படும்.
மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.
மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்.